2024 தீபாவளி வேஷ்டி சேலை வழங்கும் விழா
நமஸ்கார்,
கடந்த 2024 அக்டோபர் மாதம் மதுரை புது மாகாளிப்பட்டி ரோடு, 40 அடி ரோடு, வசந்ந பவனம் கல்யாண மஹாலில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஸௌராஷ்ட்ர சமூக எளியவர்களுக்கு தீபாவளி நன்னாளை கொண்டாடும் ஆண், பெண் 200 நபர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் இனிப்பு காரம் ஆகியவற்றை ஸௌராஷ்ட்ர சமூக தனவான்கள் உதவியோடு தமிழக ஸௌராஷ்ட்ர முன்னேற்ற பேரவை சார்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரவை தலைவர் O.V.R.M. ராஜ்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் திருமதி. A.R. மஹாலெக்ஷ்மி, திரு. R.B.R. ராமசுப்பிரமணியன், நிலையூர் 1st பிட் ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவர் திருமதி. K.K. பானுமதி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேரவை கமிட்டி நிர்வாகி. R.M. சர்மிளா வரவேற்றார். பேரவை பொதுச் செயலாளர் S.R. குமார் நன்றி கூறினார்.
Comments
Post a Comment